திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் இயங்கி வந்த ஜெயத்ரா போதை மறுவாழ்வு மையத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26, த.பெ.சீனிவாசன் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10.012026-ம் தேதி ஜெயத்ரா போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் 1.மணிகண்டன் 50/26, த.பெ. தசரதராஜ் பாண்டமங்கலம், உறையூர், திருச்சி, 2மணிமாறன் 29:26 த.பெ. சீனிவாசன் மாருதி நகர், எண்.1 டோல்கேட் திருச்சி. 3.பெரியசாமி 34,26, த.பெ. முத்துச்செழியன், அதவத்தூர், ஸ்ரீரங்கம். 4.கிருஷ்ணமூர்த்தி 30:26, த.பெ. மருதை கூகூர். லால்குடி,

5. அறிவுமணி 45:26. த.பெ. செல்லக்கண்ணு,பட்டுக்கோட்டை தஞ்சாவூர்.6. அபிஷேக் 27/26, த.பெ. மஸ்தான் வனப்பக்குடி திருவையாறு, தஞ்சாவூர் 7. சூர்யபிரகாஷ் 28:26, த.பெ. பழனியப்பன், அப்பநல்லூர், தொட்டியம் ஆகியோர்கள் மேற்படி விஜயகுமார் என்பவரை திட்டியும், மையத்தில் வைத்திருந்த தடி மற்றும் குழாய் போன்ற ஆயுதங்களால் விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 12012026-ம் காலை 0800 மணியளவில் இறந்துள்ளார். இது தொடர்பாக, சோமரசம்பேட்டை காநி குற்ற எண்.21/26, #. 1912), 191(3) 296(5), 115(2), 18(1), 105, 49 BNS @ 191(2), 191(3) 296(b), 103(1) BNS – LA செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகளில் மணிகண்டன் 50/26, த.பெ. தசரத்ராஜ் என்பவருக்கு 07.02.26 அன்று தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் மற்ற எதிரிகளான 1 மணிமாறன் 29/26, த.பெ. சீனிவாசன், மாருதி நகர், எண்.1 டோல்கேட், திருச்சி. 2 பெரியசாமி 34/28, த.பெ. முத்துச்செழியன், அதவத்தூர், ஸ்ரீரங்கம், 3. கிருஷ்ணமூர்த்தி 30/26, த.பெ. மருதை, கூகூர், லால்குடி, 4. சூர்யபிரகாஷ் 28,26, த.பெ. பழனியப்பன், அப்பநல்லூர், தொட்டியம் என்பவர்களை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாய,

அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 08.02.2026ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போதுவரை மொத்தம் 14 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments