Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழ்நாடு முழுவதும் முதல்வர், அமைச்சர்களுக்கு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் பதிவு தபாலில் மனுக்கள் அனுப்பியது

கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முடிவு செய்த அடிப்படையில் மாதம் ரூபாய் 2000 ஓய்வூதியம் என்பதனை 2026 பிப்ரவரி 17ல் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பதிவுத்தபாலில் தமிழக முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் துறை, நிதியமைச்சர், அரசு செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பும் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் பிப்ரவரி 11 காலை 11:00 மணி அளவில் மாநிலதுனைதலைவர் க.சுரேஷ் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைவர் முருகன் துணைத் தலைவர் துரைராஜ் துணைச் செயலாளர் சுமதி, ரேணுகா, மேகராஜ் பங்கேற்று திருச்சி தலைமை அஞ்சலகத்தில் பதிவு தபாலில் அனுப்பினர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *