திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தளுகை ஊராட்சியில் கட்டப்பட்ட சமத்துவபுர 100 வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது,
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பெண்களிடம் ஒருமையில் பேசி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் துறையூர்–தம்மம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்,
சம்பவத்தை தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிகழ்விடத்திற்கு செல்ல அதிகாரிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து முசிறி சார் ஆட்சியர் அவசரக் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அழைத்தபோதும், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், செல்போனையும் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
அலுவலக பணிகளில் தாமதம், மேலதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மூன்றாவது முறையாக தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments