Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காதலில் கர்ப்பிணிப் பெண் – விஷம் காரணமாக சிகிச்சை இல்லாமல் மரணம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கவரப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி – லெக்ஷட்சுமியின் 4-வது மகள் அன்னக்கிளி (17) வயது சிறுமி, இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி (22) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அன்னக்கிளி கர்ப்பமாகி உள்ளார்.

இதனால் ராம்கி திருமணம் செய்ய மறுத்தால் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அன்னக்கிளி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரை போலீசார் தேடப்பட்டு வந்த நிலையில், முன் ஜாமீன் பெற்று மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Advertisement

சிறுமி விஷமருந்து அருந்திய ஆபத்தான நிலையில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *