மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து எட்டுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்த தொழிற்சங்கத்தினர் காவல்துறையினர் தங்களை தடுத்து நிறுத்தக்கூடாது. எங்களை ரயில் நிலையம் உள்ளே விட அனுமதியுங்கள். மத்திய அரசு காண போராட்டம் மாநில அரசுக்கான போராட்டம் அல்ல என மைக்கில் பேசினர்.
ஒரு கட்டத்தில் போலீஸாருக்கும் போராட வந்த தொழிற்சங்கத்தின் இருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்து சிலர் நெரிசலில் சிக்கினார்.
இருவருக்கும் மேற்பட்ட நெரிசலில் கீழே விழுந்து போராட்டக்காரர்கள் பெண்கள் ரயில் நிலையத்தில் தடுப்பு வேலிகளில் மோதியும் கீழே விழுந்தனர்.
மீண்டும் தள்ளு முள்ளு நெரிசலில் போலீசாரும் சிக்கி தடுப்பையும் மீறி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் புகுந்து தொழிற்சங்கங்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பயணிகள் பதட்டம் அடைந்தனர்.
முதல் நடைமேடை தண்டவாளத்தில் அமர்ந்து நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாநகர காவல் துறையினர் அவர்களை கீழே இறங்க வைத்து மீண்டும் ரயிலத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர் சுமார் 30 நிமிடம் திருச்சி ரயில் நிலையம் மிகுந்த பரபரப்பு பதட்டத்துடன் காணப்பட்டது பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். காவல்துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.
500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அரசு பேருந்துகளில் ஏற்றினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments