Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் முட்டையுடன் திமுக கூட்டணி கட்சியினர் நூதன போராட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும் – அதிமுக வையும் கண்டித்து – திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்


ஏராளமான கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் தமிழ்நாட்டிற்கு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு ஜீரோ திட்டங்களே அறிவித்துள்ளதாக குறிப்பிட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக கூட்டணி கட்சியினர் கையில் முட்டையுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *