Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்: சல்மா எம்.பி., அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை

மணப்பாறை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிற்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் ராஜாத்தி என்ற சல்மா  கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் ராஜாத்தி என்ற சல்மா  கோரிக்கை மனுவில் கூறியதாவது: எனது திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையில் இருந்து தூத்துக்குடி  செல்லும் பேர்ல் சிட்டி விரைவு வண்டி (12693/12694), தாம்பரத்தில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் விரைவு வண்டி (16101/16102),  திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் திருச்செந்தூர் – சென்னை அதிவிரைவு வண்டி (16105/16106) மற்றும் திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு வண்டி (16779/16780) ஆகிய ரயில்களுக்கு மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற கோரிக்கைகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து கோரிக்கை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

எனது கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்வதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *