சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக முழுவதும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சமூக நலன் துறை
அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் 100 பெண்களுக்கு மங்கள பொருட்கள், மற்றும் ஆயிரம் நாட்கள் குழந்தைகளை வளர்க்கும் கையேடும் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments