Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் ரேஷன் கடை ஆய்வு

துறையூர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் துறையூர் வட்டார பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சங்கர்

தற்காலிக பணியிடை நீக்கம், ரேஷன் கடை பணியாளர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பணியாளர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து டாக்பியா சங்க புகாரின் பேரில் திருச்சி மண்டல இணை பதிவாளர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை, இச்சம்பவம் பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

 

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு துறையூர் வட்டார பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சங்கர் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஆய்வு செல்லும் பொழுது பணி புரியும் பெண்களிடம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து பணியாளர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது,

 

இந்நிலையில் டாக்பியா சங்க பொது செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மண்டல இணைப்பதிவாளர் துறை ரீதியான விசாரனை செய்து கூட்டுறவு சார் பதிவாளர் சங்கரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.. திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பணியாளர்களையும் இது போல சில அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பணியாளர் சங்கத்தினர் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது,

தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *