ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை VAOக்கு, RIக்கு, திருப்பராய்த்துறை ஊராட்சி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கிடையாது, கழிப்பிட வசதி கிடையாது. இயற்கை உபாதைக்கு அவசரத்திற்கு என்ன செய்வது? பெண் அதிகாரிகள், அக்கம் பக்கத்து வீட்டினரை அணுக வேண்டிய அவல நிலையில் உள்ளர்.
கோரிக்கை என்னவென்றால், உடனடி தீர்வாக உயர் அதிகாரிகள், கழிப்பிட வசதியுடன் கூடிய வீட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து தர வேண்டும் அல்லது அருகில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகம் வழங்க வேண்டும்.
மேலும் நிரந்தர தீர்வாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். கழிப்பிட வசதியுடன் கூடிய RI அலுவலகம்,
கழிப்பிட வசதியுடன் கூடிய திருப்பராய்த்துறை VAO அலுவலகம், கழிப்பிட வசதியுடன் கூடிய திருப்பராய்த்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் இருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments