Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் இரட்டை ஆயுள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

திருச்ச

திருச்சிமண்ணச்சநல்லூர் பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லதா இவர்கள் இருவரும் வாழையூரில் இருந்து பெரகம்பி செல்லும் வழியில் உள்ள வயற்காட்டில் தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லை. கடந்த 24 -4-2018 அன்று அதிகாலை ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் கட்டிலில் வெளியே படுத்திருந்த அவர்களை இரும்பு கம்பியால் தாக்கி போர்வையால் அமுக்கி கொலை செய்தனர். பின்னர் ரமேஷின் வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகள் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் இந்த வழக்கு தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலையூர் பள்ளிக்கூட தெரு குடியைச் சேர்ந்த பழனிச்சாமி, பெரம்பலூர் சத்திரமனை பகுதியைச் சேர்ந்த கிஷாந்த்(27) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் பழனிச்சாமி தற்கொலை செய்துவிட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் சக்திவேல் வாதாடினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது நீதிபதி பி சுவாமிநாதன் குற்றச்சாட்டப்பட்ட கிஷாந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

துறையூர் தேவாங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பத்மினி (வயது 52) இரண்டாவது மனைவி லலிதா (வயது 33) முதல் மனைவிக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். முதல் மனைவி முதல் தளத்திலும், இரண்டாவது மனைவி தரைத்தளத்திலும் வசித்து வந்தனர்.கடந்த 24.12.2023 அன்று அண்ணாதுரை தரைத்தளத்தில் இருந்து முதல் மனைவி வசிக்கும் முதல் தளத்துக்கு சென்ற போது அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டு இரண்டாவது மனைவி அங்கு ஓடோடி சென்று பார்த்துள்ளார்.

 

அப்போது பத்மினிகணவர் அண்ணா துரையை நைலான் கயிறு கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இரண்டாவது மனைவியை அவர் தனது வாரிசாக சேர்த்து அலுவலக பண பலன்களை கிடைக்க செய்து விடுவார் என கருதி கணவரை தீர்த்து கட்டியதாக கூறப்பட்டது.

முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டு சேர்ந்து வாழ்ந்ததாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் மனைவி பத்மினியை கைது செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்மினிக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி சக்திவேல் வாதாடினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *