பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை அறிக்கையாக வெளியிட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களிடம் திமுக தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் இன்று புகார் மனு அளித்தார்.

அதனை தொடர்ந்து திமுக தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் பேட்டி அளித்தார்.திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் மிகவும் கேவலமாக அருவருக்கத் தக்க வகையில் திமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கழகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கொள்கைக்கு முரணாக வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பி வருகிறார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய சுய அரசியல் லாபத்திற்காக திமுகவை விமர்சனம் செய்கின்றனர். திமுகவை விமர்சனம் செய்து பதவிகளை பெறுகின்றனர். திமுக தொண்டர்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது இதனால் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்குவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments