Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை
பண்ணப்பட்டி ஊராட்சி பின்னத்தூர் பகுதியில் சுமார் 40 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் இப்பகுதிக்கு வரவில்லையாம்.

குடிநீர் வரவில்லை என்று இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாத நிலையில் இன்று காலை மணப்பாறை – துவரங்குறிச்சி மாநில சாலையில் பன்னாங்கொம்பு அருகே பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *