Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மதிமுகவும் திருச்சி இரண்டாவது தலைநகராக திமுகவிடம் மனு

இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. அவர்களை சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினேன்.

அதில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி TNSTC போக்குவரத்துப் பிரிவு உருவாக்கம்.

திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவித்தல்.

திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை அமைப்பதில் முன்னுரிமை.

திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைத்தல்.

திருச்சி–மணப்பாறை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் உற்பத்தி மையமாக மேம்படுத்தல்.

தலைநகர் டெல்லியில், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வரும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழக மாணவ/ மனைவியருக்கு தனி விடுதி அமைத்து தரவும் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கல்
ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இவை மிகவும் அவசியமான திட்டங்கள்.

இந்த கோரிக்கைகளை கனிமொழி MP அவர்கள் கவனமாக கேட்டறிந்து, திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க பரிசீலனை செய்ய உறுதியளித்ததற்கு மனப்பூர்வமான நன்றி என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *