திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி ஆலம்பட்டி புதூர் பகுதியில், (பிப்ரவரி 21, 2026-ல்) இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 என்ற தலைப்பில் நடைபெறப்போகும் இம் மாநாட்டில், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுக செய்துவைக்கவுள்ளார்.
மாநாட்டு திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறையினர், போக்குவரத்து போலீஸார், மருத்துவ குழுவினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நாளை, மதியம் 03.30 மணிக்கு பறையிசை, நாட்டுப்புற பாடல், நடனம், பாட்டு கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு தொடங்குகிறது.
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், மாலை 05.30 மணிக்கு மேடையேறவுள்ளனர்.
மாலை 06.15 மணிக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொடியையும், அனையாத தீபச்சுடரையும் ஏற்றிவைக்கவுள்ளார்.
மாலை 06.30 மணி முதல் மாலை 07.30 மணி வரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசவுள்ளார்.
மாலை 07.30 மணி முதல் மாலை 08.30 மணி வரை கட்சியின் கொள்கைகளையும், தேர்தலில் வெற்றியை அடைவதற்கான பாதையை விளக்கி சீமான் பேசுகிறார்.
மாநாட்டு மேடையில் சீமான் தவிர வேறு யாருக்கும் பேசுவதற்கான அனுமதிகிடையாது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments