Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மத்திய மண்டல காவல் நிலையங்களில் புகார் பதிவு கட்டாயம் – அலட்சியத்துக்கு கடும் நடவடிக்கை: வே. பாலகிருஷ்ணன் உத்தரவு

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கு
வரும் புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒவ்வொறு காவல் நிலையத்திலும் இரண்டு வரவேற்பாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்களின் மனுக்களை நிலைய வரவேற்பாளர் பெற்று, நிலைய வரவேற்பாளர் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து அந்த புகாரை உரிய நடவடிக்கைகாக நிலைய பணி அலுவலரிடம் (GDO) ஒப்படைக்க வேண்டும்.

மத்திய மண்டலத்திலுள்ள சில காவல் நிலையங்களில் நிலைய வரவேற்பாளர்கள் சில நேரங்களில் இருப்பதில்லை என நேரடியாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், அவர்கள் மத்திய மண்டலத்தில் சில காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, காவல் நிலையங்களில் விடுமுறை அல்லது ஏதேனும் சூழ்நிலையில் நிலைய வரவேற்பாளர் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் காவல்துறை தலைவர் அவர்கள் மத்திய மண்டலத்திற்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு கீழ் கண்ட அறிவுரைகள் வழங்கி பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தியுள்ளார்.

நிலைய வரவேற்பாளர்கள் விடுமுறை தினங்கள் மற்றும் ஏதேனும் காரணங்களால் காவல் நிலையத்தில் இல்லாதபட்சத்தில், காவல் நிலையத்தில் உள்ள பாரா காவலர் புகார் அளிக்க வருபவரின் புகாரினை பெற்று வரவேற்பாளர் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து நிலைய பணி அலுவலர் உரிய நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும்.

நிலைய வரவேற்பாளர் மற்றும் பாரா காவலர் இல்லாதபட்சத்தில், காவல் நிலைய எழுத்தர் புகாரினை பெற்று வரவேற்பாளர் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நிலைய வரவேற்பாளர், பாரா காவலர் மற்றும் நிலைய எழுத்தர் இல்லாதபட்சத்தில், காவல் நிலைய பணி அலுவலர் (GDO) புகாரினை பெற்று வரவேற்பாளர் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் புகார் மனுக்களை பதிவு செய்யாமலும், நடவடிக்கை எடுக்காத வரவேற்பாளர்கள், நிலைய பணி அலுவலர், காவல் அலுவலர் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *