Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நில விவகாரம்: மக்கள் வாழ்வுரிமைக்காக ராஜகோபுரம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஸ்ரீரங்கம் வெள்ளிதிருமுத்தம் கிராமத்திற்குற்பட்ட 350 ஏக்கர் நிலம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும்,இந்த இடத்தில் பல லட்சம் மக்கள் குடியிருந்துவரும் நிலையில் இந்த இடம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தம் என்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தநிலையில், தற்போது வழங்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஸ்ரீரங்கம் மக்களின் அடிமனை வாழ்வாதார உரிமைகோரி ராஜகோபுரம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி பாகுபாடின்றி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் தலைமை கொறடா மனோகரன், காங்கிரஸ்மாமன்ற உறுப்பினர் ஜவகர், திமுக பொறுப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *