திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது கோயில் பாதுகாவலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சில வெளிநாட்டு பணத்தாள்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோயில் பணி முடித்து வந்த அலுவலர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பாதுகாவலர் சங்கர் (40) என்பவர் கோவில் காணிக்கையாக பெறப்பட்ட 27 வெளிநாட்டு பணத்தாள்களை திருடியது தெரிய வந்தது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தாள்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 12,500 என தெரிய வந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments