Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகள் அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. மணப்பாறை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சில காளைகள் களத்தில் தன்னை பிடிக்க வந்த வீரர்களை நெருக்க கூட விடாமல் விரட்டி அடிக்கும் போது களமே ஆரவாரத்தால் அதிர்ந்தது.

இதே போல் அடக்க மறுத்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கி வெற்றியும் பெற்றது. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, குக்கர், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *