Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

த.வெ.க தொண்டர்கள் வெள்ளம் போன்றவர்கள் – கு.ப.கிருஷ்ணன் பேட்டி

கரூர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்தது என்னுடைய சொந்த கருத்து எங்கள் கட்சி தலைவரின் கருத்து அல்ல. அதுவும் நான் மத்திய அரசை விமர்சிக்கவில்லை சி.பி.ஐ தான் விமர்சனம் செய்துள்ளேன்.
விஜையை கரூரில் விசாரிக்காமல் டெல்லியில் விசாரித்தது தவறு என்று தான் கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் விஜய்க்கு பாதுகாப்பு தருவதில்லை.

த.வெ.கவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத அளவிற்கு அதிக அளவு விருப்ப மனு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க விஜய்க்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரும் என கூறினால் இப்போதே மக்களை சந்திக்க நாங்கள் தயார்.

தேர்தல் அறிவிப்புக்கு பின் அடுத்தக்கட தேர்தல் பிரச்சாரம் குறித்து நாங்கள் அறிவிப்போம்.

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்களுடன் எந்த கட்சியை கூட்டணியிப் சேர்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு.

த.வெ.கவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நானும் செங்கோட்டையனும் தான் இணைந்துள்ளோம். எங்களிடம் ஊழல் கிடையாது, கருப்பு பணம் கிடையாது. நியாயவாதிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களை விஜய் கட்சியில் சேர்த்து கொண்டுள்ளார்.

திமுக, அதிமுக அமைச்சர்கள் யார் மீது வழக்கு இல்லை ?

கரூர் விவகாரத்தில் ஏன் ஒரு நபர் ஆணையம் பாதியில் விடப்பட்டது, சிறப்பு புலனாய்வு குழு ஏன் பாதியில் விடப்பட்டது ?

கரூரில் சி.பி.ஐ விசாரணை செய்திருந்தால் விஜய் கரூருக்கு நேரில் வந்திருப்பார்.

த.வெ.க தொண்டர்கள் வெள்ளம் போன்றவர்கள். எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. த.வெ.க என்பது சுயம்பு இன்ஜின்.

இலவச திட்டங்கள் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேடு பள்ளத்தை சமன் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது ஏமாற்று வேலை.

த.வெ.க மீது உள்ள பயத்தின் காரணமாக தி.மு.க, அதிமுக இரண்டு கட்சிகளும் இலவசங்களை அறிவித்துள்ளது.

திமுக அரசு தொடங்கிய மகளிர் உரிமை தொகையை நாங்கள் தொடர வேண்டும் என அவசியமில்லை நாங்கள் பொருளாதாரத்தில் சமன் செய்யும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வருவோம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான் விஜய்யின் இலட்சியம் அதை நாங்கள் செய்வோம்.

234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர் விஜய் தான் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *