Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பால் கொள்முதல் விலை உயர்த்தாவிட்டால் ஆவினுக்கு பால் நிறுத்தம் – ராஜேந்திரன் எச்சரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் திட்டமிட்டபடி தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநிலதலைவர் எச்சரிக்கை தமிழக சட்டம் பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்ல ஒரு விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தி அறிவித்திருந்தார். உயர்த்தப்பட்ட 3 ரூபாயில், நிர்வாக செலவுக்கு என்று ரூ.1.75ஐ கூட்டுறவு நிர்வாகம் பிடித்து கொள்ளும். இதனால் நேரடியாக பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1.25 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 44, எருமைபாலுக்கு 60ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, இன்றையதினம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் திருச்சி ஆவின் பால் பண்ணையில் ஆவின் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்ததுடன், ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்… 23ஆம் தேதிக்குள் தமிழக அரசு பால் கொள்முதல் விலையையும், சங்கங்களுக்கான மார்ஜின் தொகையை 5 சதவீதமாக உயர்த்தி அறிவிக்காவிட்டால், 24 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி ஆவினுக்கு தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது தனியார் பால் நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து பால் கொள்முதலை மேற்கொள்கின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வழங்காமல் தனியாருக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது, ஆவின் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாள்ஒன்றுக்கு 36 லட்சம் பால் கொள்முதல்செய்தநிலையில், நடப்பாண்டு 27லட்சமாக குறைந்துள்ளது, இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலை ஏற்படும் என எச்சரித்தனர் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வில்லை, தற்போது வந்த அரசும் 100 நாட்கள் ஆகியும் உயர்த்தவில்லை, எங்கள் பாலுக்கு நாங்கள் விலை வைக்கிறோம். 10 ஆண்டுகளாக ஆவின் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே மிகப்பெரிய முறைகேடு, கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் நஷ்டப்படும் போது தனியார் மட்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எவ்வாறு அனுமதிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

23ஆம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் திருச்சி ஆவினுக்கு பால் வழங்கும் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு செல்லும் நிலையை அரசு உருவாக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்

பேட்டி : திரு.ராஜேந்திரன் – மாநிலத் தலைவர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *