Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கர்நாடகாவிடம் ₹1 லட்சம் கோடி நஷ்ட ஈடு பெற ஜனாதிபதியிடம் மனு: அய்யாக்கண்ணு பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்திற்கு பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார், அதில்:-

தவெக தேர்தல் வாக்குறுதியின்படி, சிறு-குறு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் மற்றும் பெரிய விவசாயிகள் வாங்கிய கடன்களில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் கர்நாடகாவில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினால் அனைத்து வகை விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து, அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் சென்னைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியன்று (4.9.26) டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தாங்கள் போட்டியிடச் சென்றபோது, கோதாவரி – காவிரியை இணைப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இன்று வரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *