தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்றபிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டுவந்த அதேவேளை, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் மருத்துவமனைகள், பள்ளிகளில் என ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்டு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அரசு பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சென்று கட்சியினர் இதுபோன்று ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார்ஆனால் அதையும் மீறி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்கா சௌகத் என்பவர் மேல சிந்தாமணி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியை ஆய்வுசெய்ததும், அதனை அக்கட்சியினரே எடுத்து வீடியோவாக வெளியிட்டு பெருமையடைந்து கொள்வதும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமை உரிய நடவடிக்கை எடுக்குமா அல்லது தலைமைக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து இதுபோன்று அக்கட்சியினர் ஆய்வு மேற்கொள்வார்களா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments