திருச்சி, பிப்ரவரி 28:
தேசிய அறிவியல் தினம் வாழையின் மரபை அறிவியலால் உயர்த்தும் 500 வாழை ரகங்கள் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
பாரதத்தின் பெருமைமிகு விஞ்ஞானி, நோபல் பரிசு பெற்ற C. V. Raman அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த இவரை கௌரவிக்கும் விதமாக, திருச்சியில் உள்ள ICAR – தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆராய்ச்சி மையத்தில் பராமரித்து வரும் 500-க்கும் மேற்பட்ட வாழை ரகங்களில் இருந்து சுமார் 100 ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
காவேரி, காவேரி கல்கி, காவேரி கன்னியா, உதயம் போன்ற மேம்பட்ட ரகங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற “பிசாங் லிலின்” வாழைப்பழமும் காட்சிப்படுத்தப்பட்டது.
டிஷ்யூ கல்சர் முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்றுகள் உருவாக்கும் தொழில்நுட்பம்
வாழைக்கு ஏற்ற மண் வகைகள் மற்றும் சத்துக்கள்
மண் மாதிரி எடுக்கும் முறை
நுண்ணுயிர் தாக்கம் கண்டறிதல்
உரம் மற்றும் பராமரிப்பு முறைகள்
வாழையிலிருந்து தயாரிக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள்

சாதாரணமாக ஒரு வாழை கன்றிலிருந்து 4–5 கன்றுகள் மட்டுமே கிடைக்கும் நிலையில், டிஷ்யூ கல்சர் முறையில் ஆயிரக்கணக்கான கன்றுகள் உருவாக்கப்படுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தரமான வாழைக் கன்றுகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ஆர். செல்வராஜன் தலைமையேற்றார்.
சிறப்பு விருந்தினராக ISRO இயக்குநர் டாக்டர் டி. கௌரிசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

திருச்சியைச் சேர்ந்த விஞ்ஞானி சிவி ராமன் அவர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த தேசிய அறிவியல் தின விழா, அறிவியல் மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments