தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான “உதவி உழுவை ஓட்டுநர்” (Assistant
Tractor Operator) வேலை வாய்ப்பு பயிற்சி 27 நாட்களுக்கு இலவசமாக வேளாண்மைப்
பொறியியல் துறையின் அரசு இயந்திர கலப்பை பணிமனை திருச்சிராப்பள்ளியில் நடைபெற
உள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் டிராக்டர் ஓட்டுநர் உரிமம் பெற்று தரும்
வகையில் டிராக்டரின் வெட்டுத் தோற்றம் மாதிரி மற்றும் பயிற்சியை எளிமையாக்கும்
வகையில் இரட்டை கட்டுப்பாட்டு வசதி கொண்ட டிராக்டர் போன்ற சிறப்பம்சங்களுடன்
இத்துறையின் இயந்திர கலப்பை பணிமனையில் டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி
நிறுவப்பட்டுள்ளது.
பள்ளி
இப்பயிற்சியின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான

வேலைவாய்ப்பை உருவாக்கும்
நோக்கத்தில், டிராக்டரின் வெட்டுத் தோற்ற (Tractor’s Cut Section Model) மாதிரியைக்
கொண்டு டிராக்டரின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்த செயல்விளக்கமும் ஓட்டுநர்
பயிற்சியினை எளிமையாக்கும் விதத்தில் இரட்டை கட்டுப்பாட்டு வசதி கொண்ட டிராக்டர்
(Simulator Room) ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பயிற்சி நடைபெற உள்ளது. எனவே,
18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில்
கலந்து
பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.
இப்பயிற்சிக்கு ஏற்கனவே இலகுரக ஓட்டுநர் (Light Motor Vechicle Licence) உரிமம் பெற்று

இருக்கக் கூடாது. இப்பயிற்சியானது நடப்பாண்டு ஜூன்- மாதம் இரண்டாம் வாரத்தில்
துவங்கி 27 வேலை நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சி நிறைவு செய்த பின் உழுவை
இயந்திரத்திற்கான (Tractor) ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும்
ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட விவரங்களுடன் www.skillindia.gov.in
இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது வெற்றி நிச்சயம் என்ற

இணையதள செயலி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு 95788 17788, 63813 33580, 9842244243 ஆகிய
தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட
தகவலை திருச்சிராப்பள்ளி
திரு.பிரத்திக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision

Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments