திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் தியான், இ.ஆ.ப., நேரில்

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலின் முன்னோடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) முதல்நிலை சரிபார்க்கும் பணியானது இன்று (03.06.2026) முதல் தொடங்கி நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்அடிப்படையில்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் முதல்நிலை சரிபார்ப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் நேற்று (02.06.2026) அனைத்தும் முடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (03.06.2026) திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் தியான், இ.ஆ.ப., தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையானது திறக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள Bharath Electronic Ltd – ஐ சேர்ந்த 06 (ஆறு)

பொறியாளர்களால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) முதல்நிலை சரிபார்க்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 608 எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) முதல்நிலை சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது. மேற்கண்டுள்ள முதல் நிலை சரிபார்ப்பு காலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கண்காணித்திட உரிய ஏற்பாடுகள் மாவட்ட

நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.சாலை தவவளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.ராஜா, தேர்தல் வட்டாட்சியர் எம்.சக்திவேல் முருகன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments