தற்போது கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.பல்வேறு வகையான முக கவசங்கள் மக்களுக்குக் கிடைக்கும் சூழலில், இயற்கை சார்ந்த முகக் கவசங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வகையில் வெட்டிவேர் பயன்படுத்தி முகக் கவசங்கள் தயாரித்து வருகிறார் திருச்சி குமரன் நகரைச் சேர்ந்த பேஷன் டெக்னாலஜி முடித்த இளம் பட்டதாரி பெண் லாவண்யா.
தேசிய உடை அலங்கார தொழில்நுட்ப கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்துவிட்டு, பல்வேறு ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வந்த லாவண்யா, தற்போது ஊரடங்கு காரணத்தினால் ஆடை வடிவமைப்பு தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளதை அடுத்து மாற்று வேலையாக வெட்டிவேர் பயன்படுத்தி முக கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வெட்டிவேர் முகக் கவசங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினருக்கும், சமூக சேவகர்களுக்கும் இதனை விநியோகம் செய்து வருகிறார்.மேலும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வேலையாட்களுக்கு தொழில் நிறுவனங்கள் சார்பில் ஆர்டர் கொடுப்பதாகவும், ஒரு முகக் கவசம் 60 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.
வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதாலும்,கிருமிநாசினி இருப்பதாலும், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை சீர் செய்வதாலும், வெட்டிவேர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இவர், இந்த முக கவசங்களை துவைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்.
தற்போது அனைத்து தரப்பினரும் முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அணிந்து கொள்ளும் வகையில், அதற்கேற்றார்போல் துணிகளின் வண்ணங்கள், அளவுகள் வைத்து முக கவசம் தயாரிப்பதாகவும் இயற்கை மணம் மாறாத வெட்டிவேர் முக கவசங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார் லாவண்யா…
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           9
9                           
 
 
 
 
 
 
 
 

 08 July, 2020
 08 July, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments