எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில், திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழூர் பகுதியில் கடந்த 22.02.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது அப்பகுதி கிராம மக்கள், இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, வாகனங்கள் வேகம் குறைத்து செல்லும் வகையில் அங்கு போக்குவரத்து தடுப்புகள் (Barricades) அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு,
அப்பகுதியில் போக்குவரத்து தடுப்புகள் அமைத்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
இதனைத் தொடர்ந்து, இன்று (03.03.2026) உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு போக்குவரத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனது கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்
காவல்துறை அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments