திருச்சி மாவட்டம், திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் 31 டிரைவர், தனக்குச் சொந்தமான எர்டிகா காரை ஓட்டிக்கொண்டு மனைவி கவிதா, ஒரு வயது மகன் ஏகவன் குழந்தை, மாமனார் முருகேசன் 50, மனைவி சித்ரா 45 முருகேசனின் மகள்கள் கவிதா (25), நர்மதா (28) ஆகியோர்

ஸ்ரீரங்கத்திலிருந்து கொடுமுடிக்கு பாலசுப்பிரமணியனின் மைத்துனர் கார்த்திக் 29 என்பவருக்கு கொடுமுடி கோவிலில் பரிகாரம் செய்துவிட்டு திரும்ப பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனுருக்கு முருகேசன் குடும்பத்தினரை இறக்கி விடுவதற்காக முசிறி முதல் துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஜம்முநாதபுரம் காவல் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலையில் செல்லும்பொழுது துறையூர் பகுதியில் இருந்து எதிரே முசிறி நோக்கி லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதிவிட்டது, மோதியதில் நிகழ்விடத்தில் பாலசுப்ரமணியன்,

இவரது மைத்துனர் கார்த்திக் உயிரிழப்பு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முருகேசன், கவிதா, நர்மதா, சித்ரா, ஏகவன் ஆகிய ஐந்து பேர்களை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், இதில் முருகேசன் மற்றும் கவிதா
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்,
லாரி கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் அப்பா அம்மாவை விபத்தில் இழந்து குழந்தை ஏகவன் 1 வயது மற்றும் நர்மதா, சித்ரா ஆகிய மூன்று பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
விபத்து குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
காம் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் முசிறிப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

இன்று விபத்து நடந்த மாநில நெடுஞ்சாலை ஜம்புமநாதபுரம் பகுதியில் இதுவரை பல்வேறு விபத்துகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இனி அப்பகுதிகளில் விபத்துகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments