தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவர் சதுரங்கப் போட்டி திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.
இந்திய பல்கலைக்கழக சம்மேளனம் வழிகாட்டுதலின்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நடத்தும் இந்தப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 110 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 660 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று தொடங்கி 5ம்தேதிவரை நடைபெறும் இப்போட்டினது, சர்வதேச தரவரிசை பட்டியல் பிடே ரேட்டிங் அடிப்படையில், ஒரு சுற்றுக்கு 3 மணி நேரம் என்றவகையில் 7சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் 4வீரர்கள் வீதம் பங்கேற்று விளையாடுகிறார்கள். இதில் வெற்றிபெறும் 4அணிகள் மணிபாலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்கபோட்டியில் பங்கேற்று விளையாடுவார்கள்.

ஒரு சுற்று போட்டிகளும், எதிரணியை வீழ்த்தி பெறும் புள்ளிகளும் அதிமுக்கியமானது என்பதால், மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் யோசித்து சதுரங்க காய்களை நகர்த்தி விளையாடினார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments