Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை பாதிப்பு: திருச்சி விமான நிலையத்தில் 50% கார்கோ சேவை முடக்கம்!

அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்துவருகிறது. இதன்காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானசேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய இயக்குனர் எஸ்.எஸ் ராஜு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரானில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கடந்த 28ஆம் தேதி 180 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சியில் தரைஇறக்கப்பட்டது, அவர்களுக்கான பணமும் திரும்பவழங்கப்பட்டது.

தினசரி அபுதாபிக்கு மற்றும் துபாய்க்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளது, தற்காலிகமாக துபாய் மற்றும் மஸ்கட்டில் மீட்புபணிக்காக விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்றையதினம் 82 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் சென்று இறங்கியது, இரண்டு மூன்று நாட்களில் இந்தநிலை சீராகும் என எதிர்பார்க்கிறோம். ஏர்போர்ட் அத்தாரிட்டிமூலம் திருச்சி விமான நிலையம் மீட்பு விமானங்களை கையாளவும், வழித்தடங்கள் திறக்கப்பட்டால் மீண்டும் உடனே இயக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தகவல்கள் மற்றும் அறிவுறுத்துகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் மூலமாக கொடுத்து வருவதாகவும், விமானசேவை தொடங்கப்பட்டால் விமான நிலையம் மற்றும் அந்தந்த விமான நிறுவனங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினசரி 7000 உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமான பயணிகள் வருகைபுரிந்த நிலை மாறி தினசரி 1500 பயணிகள் வருகை குறைந்துவிட்டது என்றும், விமான சேவை தொடங்கியவுடன் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்றார்.

அதிகமான பயணிகள் கையாளப்படும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கான விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார், அதேநேரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே அதிக அளவில் திருச்சியில் இருந்து கார்கோ சேவை

பயன்பாடு உள்ளதாகவும் 542 டன் கார்கோ சேவை இருந்துவந்த நிலையில் தற்போது போர் பதற்றம் காரணமாக 50 சதவீதம் கார்கோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்றார் இதுஒரு தற்காலிக சூழல்தான், மீண்டும் விமானசேவை தொடங்கும்பட்சத்தில் கார்கோ சேவையும் தடையின்றி செல்லும் என்றார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *