திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜெம்நோதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விடுகோடு பிள்ளையார் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் 35/22, த.பெ.திருப்பதி என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சுதா 40/22, க.பெ.முருகேசன் என்பவரின் மகள் லாவண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர்,

மேற்படி கணவன், மனைவிக்குமிடையே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லாவண்யா வெங்கடாசலத்தை பிரிந்து அவரது தாயான சுதா வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25.10.2022 – ம் தேதி வெங்கடாசலம் மேற்படி சுதா வீட்டிற்குச் சென்று லாவண்யாவை தன்னுடன் வருமாறு அழைத்த நிலையில் லாவண்யா அதற்கு மறுத்ததாகவும், அதனால் வெங்கடாசலம் லாவண்யா மற்றும் அவரது தாய் சுதாவை திட்டியும், சுதாவை அருவாளால் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31.10.2022 – ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக கார்த்திக் 40/22, த.பெ.சிவராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெம்நோதபுரம் காவல் நிலைய குற்ற எண். 164/22, U/s 341, 294(b), 307 IPC @ 341, 294(b), 302 IPC – ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (01.06.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, எதிரி – வெங்கடாசலம் 35/22, த.பெ.திருப்பதி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த ஜெம்நோதபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் சாந்தி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவீண் உமேஷ், இ.கா.ப பாராட்டினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision

Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments