Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பரங்கிரி வேலு பூங்காவில் காய்ந்து தொங்கும் மரக்கிளை – விபத்து அபாயம் என பொதுமக்கள் அச்சம்

திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பரங்கிரி வேலு பூங்காவில் மரக்கிளை ஒன்று காய்ந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பூங்காவில் உள்ள கோர்ட் பகுதியில் மரக்கிளை நீண்ட நாட்களாக காய்ந்து தொங்கிக் கொண்டிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் நிலவி வருகிறது. குறிப்பாக வாகனங்கள் மீது அல்லது பூங்காவிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது விழும் சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே விபத்து ஏற்படும் முன்பே மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து காய்ந்த மரக்கிளையை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *