கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் அச்சத்துடனே வெளியில் வருகின்றன.இந்நிலையில் திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை காவிரி பாலம் அருகே சத்யம் ஒட்டல் முன்பாக அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவரின் பையில் இருந்த குடும்ப அட்டை நகலில் இறந்தவர் வெங்கடேசன் என்றும், தந்தை பெயர் ஜெயராமன் என்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பிற மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 09 July, 2020
 09 July, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments