திருச்சி மேற்கு தொகுதி, இத்தொகுதியில் திமுக வை தோற்றுவித்த முன்னோடி தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், அவரது மகன்கள் அன்பில் பொய்யாமொழி மற்றும் அன்பில் பெரியசாமி ஆகியோர் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
லால்குடி தொகுதி மக்களால் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பிறகு, தற்போதைய, தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சராகவுள்ள கே.என்.நேரு,
“அன்பில் தர்மலிங்கம் எனது அரசியல் வழிகாட்டி” என கூறிக்கொண்டு, “திருச்சி மேற்கு” தொகுதியை தனதாக்கிக்கொண்டார்.
“திருச்சி மேற்கு” தொகுதி தேர்தல் முடிவுகள் (2008 – 2026)
ஆண்டு வெற்றி பெற்றவர் அரசியல் கட்சி: 2011 பொதுத்தேர்தல் என். மரியம்பிச்சை அஇஅதிமுக (AIADMK), 2011 இடைத்தேர்தல் மு. பரஞ்சோதி அஇஅதிமுக (AIADMK), 2016 பொதுத்தேர்தல் கே. என். நேரு திமுக (DMK), 2021 பொதுத்தேர்தல் கே. என். நேரு திமுக (DMK)
கடந்த 2011-இல் வெற்றி பெற்ற என். மரியம்பிச்சை, அஇஅதிமுக வின் அமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில், பதவியேற்புக்கு முன்பாகவே விபத்தில் காலமானார். அதே ஆண்டில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து படியே தேர்தலை சந்தித்த திமுக வேட்பாளர் கே.என்.நேரு, அஇஅதிமுக வேட்பாளர் மு. பரஞ்சோதியிடம் தோல்வியை சந்தித்தார்.
திருச்சி மேற்கு தொகுதியை தனதாக்கிக்கொண்ட தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கடந்த 1989 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவுபட்டிருந்த காலத்தில் லால்குடி தொகுதியில், திமுக வேட்பாளராக போட்டியிட்டு, கே.என்.நேரு தனது முதல் வெற்றியை பதிவுசெய்தார். திமுக தலைமையிலான தமிழக அரசு கலைக்கப்படும் வரை 1989-91 காலக்கட்டத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
தமிழக அமைச்சரான கே.என்.நேரு இதுவரை 9 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக 5 முறை வெற்றி பெற்றுள்ளார். 4 முறை தோல்வியைச் சந்தித்துள்ளார்
1989-91 லால்குடி தொகுதியில் கே.என்.நேரு திமுக வெற்றி. 1996: லால்குடி தொகுதியில் கே.என்.நேரு திமுக வெற்றி. 2006 “திருச்சி-2” தொகுதியில் கே.என்.நேரு திமுக வெற்றி. 2016 “திருச்சி மேற்கு தொகுதி பொதுத்தேர்தல் கே.என்.நேரு திமுக வெற்றி. 2021 “திருச்சி மேற்கு தொகுதி பொதுத்தேர்தல் கே.என்.நேரு திமுக வெற்றி.
அவருக்கு தோல்வியை தந்த 4 தேர்தல்கள்: 1991: லால்குடி தொகுதி (அதிமுக வேட்பாளர் சதிதேவியிடம் தோல்வி). 2001: லால்குடி தொகுதி (அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.பாலனிடம் தோல்வி).
2011: திருச்சி மேற்கு தொகுதி (அதிமுக வேட்பாளர் என். மரியம் பிச்சையிடம் தோல்வி). 2011 (இடைத்தேர்தல்): திருச்சி மேற்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் மு. பரஞ்சோதியிடம் தோல்வி.
அதேசமயம் வெற்றிபெற்ற காலத்தில் தமிழக அமைச்சராக கே.என்.நேரு, நிர்வகித்த துறைகள் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை (2021 முதல் 2026)
போக்குவரத்துத் துறை (2006 முதல் 2011)
2008 முதல் 2009 வரையிலான இடைப்பட்ட காலத்தில் கூடுதலாக விவசாயத் துறை
உணவு, பொது விநியோகத் திட்டம் மற்றும் கூட்டுறவுத் துறை (1996 முதல் 2001)
மின்சாரம், பால்வளம், செய்தி மற்றும் தொழிலாளர் நலத்துறை (1989-1991)
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments