திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து அமைச்சர் கே. என்.நேரு பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை கொட்டப்பட்டு பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து அமைச்சர் கே. என்.நேரு பிரச்சாரத்தை துவங்கி வைத்து பேசிய போது.

கொட்டப்பட்டு கிராமத்தில் திமுக மாநாடு நடத்தப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக பணியாற்றி முதலமைச்சர் அவர்களிடம் நற்பெயரை பெற்றவராக இருந்து வருகிறார். மக்கள் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தருகிறார். மக்களிடம் தொடர்ந்து நம்பிக்கை பெற்ற வேட்பாளராக மகேஸ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இவருக்கு *hat-trick வெற்றியாக வெற்றி பெற மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.* திருச்சி மாவட்டத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெற்று திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் மாநாடு நடத்தப்பட்ட போது மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு அளித்த பின்பு தான் மாநாடு வெற்றிகரமாக நடத்தினோம். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக கொண்டு செல்வதற்கு மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பேராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்..
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments