Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி உறையூரில் மின்கம்பி மீது சாய்ந்த கட்டுமான சாரம் – போக்குவரத்து பாதிப்பு

திருச்சி உறையூரில் விபரீதம்; மின் கம்பியில் சாய்ந்த கட்டுமானச் சாரம் – போக்குவரத்து பாதிப்பு.திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, உறையூர் சாலை ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காகக் கட்டிடத்தைச் சுற்றி மர சாரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எதிர்பாராத விதமாக இன்று இந்தச் சாரம் திடீரென சரிந்து அருகில் இருந்த மின் கம்பியின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது, அதிர்ஷ்டவசமாகப் பணியாளர்களுக்கோ அல்லது அந்த வழியாகச் சென்ற பொதுமக்களுக்கோ எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக அந்தச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த உறையூர் காவல்துறையினர், உடனடியாகக் போக்குவரத்தைச் சீரமைத்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். எனினும், சாலையின் குறுக்கே சாரம் விழுந்து கிடப்பதால், அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் செல்கின்றனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை. சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் சாரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், போக்குவரத்து வழக்கம்போல தடையின்றி நடைபெற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *