Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் வாகனங்கள் பொது ஏலம்: காவல் ஆணையர் அறிவிப்பு!

திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில்
கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனம் 03, (Innova-1, Swift Dzire-1,
Renault Kigher-1) மற்றும் இரண்டு சக்கர வாகனம் -03 ஆக மொத்தம்
06 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.


மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 06.07.2026-ம்தேதி
காலை 09.30 மணியளவில் பொன்மலையில் உள்ள திருச்சி மாநகர
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற
06.07.2026-ம்தேதிக்கு முன்னதாக பொன்மலை ஆர்மரிகேட் அருகில்
திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் உள்ள ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும்


நாளான 06.07.2026ந்தேதி காலை 1000 மணிக்குள் தங்களது ஆதார்
அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000/-ம், இருசக்கர
வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு
செய்து கொள்ள வேண்டும்.

வாகனங்களை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் அதற்குரிய
சரக்கு மற்றும் சேவை வரியான GST தொகையையும் செலுத்தி
வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர்
ந.காமினி இ.கா.ப தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *