Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விவசாயிகள் வேதனை..!!சூறைக்காற்றில் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்..!

 

திருச்சி மாவட்டத்தில் வயலூர், சோமரசம்பேட்டை, அந்தநல்லூர், குழுமணி, எட்டரை, கோப்பு, பனையகுறிச்சி, சர்க்கார்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல்லுக்கு அடுத்தபடியாக திருச்சியில் வாழைசாகுபடி முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படும் இவ்வேளையில், திருச்சியில் நேற்றிரவு பலஇடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்தது அதே நேரம் நேற்று இரவு மாவட்டத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன், பலத்த சூறைக்காற்றுடன் கூடியகனமழை வெளுத்து வாங்கியது, சராசரியாக 23.48 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வயலூர், எட்டரை, கோப்பு, மேலவயலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 1200 ஏக்கர் பரப்பினாலான நேந்திரம் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தது.

இதனால் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடகுவைத்தும் ஏக்கருக்கு சுமார் 2 லட்சத்து 15ஆயிரம் ரூபாய்வரை செலவிட்ட நேந்திரம் வாழை விவசாயிகளுக்கு அறுவடைக்கு 1மாதமே உள்ளநேரத்தில் இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் என்னசெய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அரசு பாதிப்புக்கு உள்ளான வாழைபயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *