Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழகத்திலேயே லால்குடி தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் – லீமா ரோஸ் மார்ட்டின்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

முன்னதாக லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து தொண்டர்கள் புடைசூழ வருகை தந்த லீமா ரோஸ் மார்ட்டின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் பாலன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


தொடர்ந்து லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

கடந்த 20 வருடமாக லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை என மக்கள் கூறி வருகின்றனர்

லால்குடி பகுதி பொதுமக்கள் என்னை வேட்பாளராக அறிவித்த பின்பு மகிழ்ச்சியாக உள்ளனர்

எடப்பாடியார் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி உள்ளார் அதை முதலமைச்சர் ஆன பின்பு செய்வார் அதே போல நாங்கள் மார்ட்டின் தொண்டு நிறுவனம் வைத்துள்ளோம் அதில் பல கோடி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளோம் லால்குடி மக்கள் என்னுடைய மக்கள்

நான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு லால்குடி தொகுதியை தத்தெடுத்து தமிழகத்திலேயே லால்குடி தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்

மேலும் லால்குடி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர் எடப்பாடி யார் முதலமைச்சர் ஆன பின்பு அவரிடம் கூறி அதையும் செய்து கொடுப்போம் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் எனக்கு கூறினார்.

வெற்றி பெற்ற பின்பு இடையாற்று மங்கலம் கிளிக்கூடு பாலத்தை அமைத்து தருவோம் எனக் கூறினார்

லால்குடி பொதுமக்கள் பலவேறு கோரிக்கைகள் வைத்து உள்ளனர் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு 5 வருடங்களில் தொகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி மருத்துவமனை , ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *