Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: கஞ்சா போதையில் இளைஞர்கள் பயங்கர மோதல் – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா மட்டும் போதை பொருட்கள் பயன்பாட்டால் இளைஞர்கள் சீரழிந்து வருவது அதிகரித்துவருகிறது.

இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக அரசும் காவல்துறையும் கைகளை கட்டிக்கொண்டு, வாய்மூடி மௌனம் காப்பதாலும் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக நடந்து கொள்வதாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது

திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புத்தூர் வி.என்.பி தெரு பகுதியில் கஞ்சாபோதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாக இருந்துவருகிறது.

இந்நிலையில் நேற்று இரவுநேரத்தில் அப்பகுதியில், இளைஞர்கள் கஞ்சா போதையில் அடிதடியில் ஈடுபட்டு, மிகுந்த கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த சிசிடிவி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கஞ்சா போதை இளைஞர்களால் தினந்தோறும் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியிருப்புகளில் வசிப்பதற்கு மக்கள் பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறதுஎன இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *