Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி மட்டுவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்சிக்கு பெருமைசேர்ப்பதும், தென்கயிலாயம் எனப்புகழ்பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் சித்திரை தேர்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்,


அதன்படி கடந்த 21-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் தேர்திருவிழாவின் ஒருபகுதியாக திருக்கல்யாணவைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமானவர்சுவாமி, மட்டுவார்குழலி அம்மையாருடன் எழுந்தருளினார். சிறப்பு யாகங்களைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருமண வைபவம் கைகூடவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இத்திருக்கல்யாணம் காண்பது சிறப்புவாய்ந்து என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருக்கல்யாண வைபத்தைக்கண்டு, தாயுமானவர் உடனுறை மட்டுவார்குழலி அம்மையாரை வலம்வந்து வழிபட்டுச் சென்றனர்.

முக்கிய திருவிழாவான மலைக்கோட்டை தாயுமானசுவாமி தேரோட்டம் 29ம் தேதி காலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *