பிஎம் ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் புதியஅரசுக்கு தமிழகத்தின் நலன்சார்ந்து கட்சிபேதமின்றி ஓரணியில் பின்னால் நிற்போம் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.பிளஸ் டூ பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது, தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும் இதற்கு உழைக்க ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த தேர்ச்சி விகிதத்தை தலைவர் ஸ்டாலின் அவரிடம் தெரிவித்ததுபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், திருச்சி மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, அதேபோல அரசு பள்ளிகள் தேர்ச்சி விதத்தில் முதல் 3வது இடத்தை பெற்றது இன்னும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, பல்வேறு பாடங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், தமிழில் மட்டும் 83 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர், வழக்கம்போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வரும் காலங்களில் மாணவர்களும் தேர்ச்சிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைவருக்கும் நன்றியிணை தெரிவித்துக் கொண்டார் கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றியதால் தான் இந்த தேர்ச்சியை தர முடிந்தது, ரிசல்ட் என்பது வாழ்க்கை அல்ல நாம் நம்மை அறிந்து கொள்வதற்கும் என்ன தெரிந்துகொண்டோம் என்பதற்கான ஒரு தேர்வு தான், தேர்ச்சி பெற இயலாதவர்கள் அரசு தேர்வுத்துறை துணைத் தேர்வு அறிவித்துள்ளனர்மனதை வளர விடாமல் விண்ணப்பித்து வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிஎம் ஸ்ரீ எதனால் நாங்கள் வேண்டாம் என்பதனை பல நேரங்களில் விட்டு சொல்லி இருக்கிறோம் சிக்கல்களையும் மதயானை என்ற புத்தகத்தின் வாயிலாகவும் அடுக்கடுக்காக தெரிவித்துள்ளோம், அரசியல் பார்க்காமல் இதனை எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையை போதுமானது மும்மொழி கொள்கை ஏற்கமாட்டோம், என இருந்தோம். என்னவெல்லாம் சொல்லி அவர்கள் உங்களை மிரட்டினாலும் புதிதாக ஆட்சிக்கு வர கூடிய யாராக இருந்தாலும் அதற்கு பயந்து விடக்கூடாது, நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுக்கு ஒட்டுமொத்தமாக தமிழகமே உங்களுக்கு பின்னால் இருக்கும் தமிழகத்தின் நலன் சார்ந்து கட்சி பேதமின்றி ஓரணியில் நாங்கள் நிற்போம் என்ற உத்தரவாதத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

பேட்டி : திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி – முன்னாள் அமைச்சர்குறிப்பு படக்காட்சி திருச்சி எப்டிபி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments