மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்-2026 தேர்வு முடிவுகள் பகுப்பாய்வின்படி, மார்ச்/ஏப்ரல் 2025-ல் 14,492 மாணவர்கள் தேர்வு எழுதி 13,598 பேர் தேர்ச்சி பெற்று 93.83% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தனர். அதே ஆண்டில் 16,726 மாணவிகள் தேர்வு எழுதி 16,318 பேர் தேர்ச்சி பெற்று 97.56% தேர்ச்சி பெற்றனர்; ஒட்டுமொத்தமாக 31,218 பேர் தேர்வு எழுதியதில் 29,916 பேர் தேர்ச்சி பெற்று 95.83% தேர்ச்சி விகிதம் எட்டப்பட்டது. மார்ச்/ஏப்ரல் 2026 முடிவுகளின்படி, 14,557 மாணவர்கள்

தேர்வு எழுதி 13,982 பேர் தேர்ச்சி பெற்று 96.05% தேர்ச்சியும், 16,373 மாணவிகள் தேர்வு எழுதி 16,175 பேர் தேர்ச்சி பெற்று 98.79% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 30,930 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 30,157 பேர் தேர்ச்சி பெற்று 97.50% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகித ஒப்பீட்டின்படி, 2023-2024 ஆம் ஆண்டில் 95.74% தேர்ச்சியுடன் மாநில அளவில் 13-வது இடத்தையும், 2024-2025 ஆம் ஆண்டில் 95.83% தேர்ச்சியுடன் 12-வது இடத்தையும், தற்போதைய 2025-2026 ஆம் ஆண்டில் 97.50% தேர்ச்சியுடன் மாநில அளவில் 5-வது இடத்தையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பிடித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் 08.05.2026 நாளிட்ட விவரப்படி, இம்மாவட்டத்தில் 258 பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விவரங்களைப் பொறுத்தவரை, 5,063 மாணவர்கள் தேர்வு எழுதி 4,804 பேரும் (94.88%), 5,756 மாணவிகள் தேர்வு எழுதி 5,642 பேரும் (98.02%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.55% ஆகவும்,

இதற்கான மாநில தர வரிசை 3 ஆகவும் உள்ளது. அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய நிலையில் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.50% ஆகவும், மாநில தர வரிசை 5 ஆகவும் உள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments