Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சிட்கோ கிளை மேலாளர் கையும் களவுமாக கைது!

திருச்சி, அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார்
கலா பெயரில் சத்து மாவு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி
வருகின்றார். மேற்கண்ட நிறுவனத்திற்கு டான்சிட்கோ மூலம் திருச்சி துவாக்குடியில் உள்ள
TANSIDCO INDUSTRIAL ESTATE-க்கு சொந்தமான இடத்தில் பிளாட் எண்.3 என்ற

 


பிளாட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ.20,000/-ஐ,
திருச்சி, TANSIDCO கிளை மேலாளர் சத்தியராஜ் என்பவர் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பாத முரளி, இன்று (08.05.2026) திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்பு பிரிவில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்
அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன் மற்றும் காவல்


ஆளினர்களுடன் இன்று மதியம் இரசாயனப் பொடி தடவிய பண நோட்டுகளை புகார்தாரர்
முரளியை திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி
பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை
மேலாளர் .சத்தியராஜ், வயது 51/2026 த/பெ செண்பகம் என்பவர் புகார்தாரரிடம் இருந்து
பொடி தடவப்பட்ட லஞ்சப் பணம் ரூ.20,000/-ஐ கேட்டு பெற்ற போது கையும் களவுமாக
பிடிபட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை
நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டிலும்
சோதனை நடைபெற்று வருகிறது.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *