Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தரைக்கடை அகற்றம் – வியாபாரிகள் போராட்டம்

திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகள் கடை அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்தனார்.

என்எஸ்பி சாலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட தரைக்கடையைகளை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமலும், மாற்று இடம் வழங்காமலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியதால் சுமார் ஆயிரக்கணக்கான தரைப்படை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

ஐந்து மாதங்கள் மேலாகியும் தற்போதுவரை அவர்களுக்கு மாற்றுஇடம் ஒதுக்காமலும், ஏற்கனவே வழங்கப்பட்ட கடைகளுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தராதது கண்டித்தும், என்எஸ்பி சாலையில் இன்று மீண்டும் தரைக்கடை அமைக்கும் போராட்டத்தில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி சங்கங்களை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான வசதிகளை இரண்டு நாட்களுக்குள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர், இதனால் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

பேட்டி : திரு அன்சர்தீன் – ஏஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் குறிப்பு படக்காட்சி திருச்சி எப் டி பி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *