திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மொத்தம் 64 இடங்களில், தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டங்களில், 499 தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டங்களின் மூலம் 1,005 தனியார் பேருந்துகள், 567 வழித்தடங்களில் இயங்குவதாகவும், ஏற்கனவே 605 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாகவும் மீதமுள்ள 400 பேருந்துகளில் 25.05.26ம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

பொது இடங்கள் மற்றும் கிராமப்புற சாலைகளில் சிசிடிவி கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுவதுடன், ஒட்டுமொத்தப் பகுதியின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments