திருச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் முன்பு நடைபெறுவதாக இருந்தது அங்கு சனாதனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் இந்து

முன்னணி கட்சி சார்பில் அதே இடத்தில் சனாதானத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்தது. இந்நிலையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே வந்தபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர் அதே இடத்திற்கு வருகை தந்த இந்து முன்னணி கட்சியினர் சனாதனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குச்சி காலனி மற்றும் வாட்டர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்து முன்னணி கட்சி மாவட்ட நிர்வாகி போஜராஜன் அளித்த பேட்டியில்,
சனாதானத்தை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இது கண்டனத்துக்குரியது ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. உதயநிதி ஜாமீன் பெற்று வெளியே வந்து உள்ளார். இருப்பினும் அவர் சட்டமன்றத்தில் சனாதனத்திற்கு எதிராக பேசியுள்ளார். பெரியார் விநாயகர் சிலையை சாலையில் போட்டு உடைத்தார். இதேபோல பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விபச்சாரிகள் மகன்கள் என ஆபாசமாக பேசினார். அது போல் தற்போதும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வருகிறது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments