இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (26.05.2026) பகல் திருச்சி பகல் 3 மணிக்கு, திருச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல், அருண் மேக்சி ஏசி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் கு.சாமிதுரை தலைமை வகித்தார். இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம்.செல்வகுமார் வரவேற்றார்.

ஏஐடியூசி தொழிற்சங்க மூத்த தலைவர் டி.எம்.மூர்த்தி பங்கேற்று அரசியல் நிலைகள் குறித்து விளக்க உரையாற்றினார். டெல்லியில் நடைபெற்ற தேசிய குழு கூட்ட முடிவுகள் குறித்து தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மு.அ.பாரதி உரையாற்றினார். மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடு உள்ளிட்ட எதிர்கால பணிகள் குறித்து இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எடுத்துரைத்தார். வரவு செலவு அறிக்கையினை மாநில பெருளாளர் வழக்கறிஞர் கே.ஆர்.ராமமூர்த்தி முன்வைத்தார், மூத்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், ஏஐடியூசி மாநகர நிர்வாகி எஸ்.சிவா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில மாநாட்டை கோவையில் நடத்துவது என்றும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் 100 வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டன.
இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் வெ.அழகிரிசாமி, ப.மா.பாலமுருகன், கே.கே.சாமி, வி.கே.சுப்பிரமணியன், எம்.முபீன், ப.மோ.சுபாஷ், ஆர்.முருகன், ஜி.பி.சக்திவேல், க.சுதிர்பாசு, என்.கார்த்திகேயன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்வைத்து பேசினர்

தீர்மானங்கள்:-
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1957இல் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கும் சார்நிலை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1976இல் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982 இல் உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியானது. 2006 இல் அன்றைய தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை நிறைவேறிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பார் கவுன்சில் தயாரித்துள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கவும், உடனடியாக அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்போடு ஒன்றிய புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சமாக உள்ளதை உயர்த்தி ரூபாய் 25 லட்சம் ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதித்துறை நியமனங்கள் சீர்திருத்தம் செய்வதற்கு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, மக்கள் தொகை மற்றும் பெண்களின் விகிதாச்சாரத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
உச்ச நீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும்,
தமிழகத்தில் உள்ள நீதித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கவும், காலிப் பணியிடங்கள் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 அவர்களிடம் வழக்கறிஞரின் நியாயமான கோரிக்கைக்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட நான்கு வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது ஏற்கதக்கதல்ல. வழக்கறிஞர்களின் நியாயமான, நேர்மையான, சுதந்திரமான, நீதி பரிபாலான செயல்பாடுகளை மதுரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாதுக்காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments