தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்டது.இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள்திறக்கப்படும்எனஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் காரணமாக ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல்திறக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளி திறப்பை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த சில தினங்களாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள்தூய்மைப்படுத்தப்பட்டுள்து.

பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பள்ளியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும், மலர்கள் கொடுத்தும் ஆசிரியர்கள்உற்சாகமாகவரவேற்பளித்தனர்.

கோடை விடுமுறையில் சந்தோஷமாக இருந்த மாணவ, மாணவியர், பள்ளி வளாகத்தை அடைந்ததும் பரவசமடைந்தனர். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குள் நுழைந்தனர். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் தங்களது உடைமைகளுடன் வருகை தந்தனர். மேலும் மாணவர்களுக்குமுதல்நாளேவிலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments